
மாணவ சமுகத்துக்கேதிராக பொலிசில் முறைப்பாடு செய்த E.P.D.P தவராஜா! கிளர்ந்தெழுவார்களா மாணவர்கள்?
வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஆகியோர் பாவப்பட்ட பணத்தை வாங்க மறுத்ததால் தவராஜாவின் வீட்டுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் தவராஜாவின் வீட்டு படலையில் பாவப்பட்ட பணத்தை கட்டிவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது,
இதையடுத்தே யாழ் பொலிசாரிடம் தவராசா முறையிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக தான் கொடுத்த 7,000 ரூபா பணத்தையும் திரும்ப தரும்படி எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மாகாணசபையில் கோரியிருந்தார். எனினும், இந்த கோரிக்கையை கைவிடுவதாகவும் அவையில் கூறியிருந்தார்.
இதையடுத்து கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஒரு ரூபா வீதம் பணம் சேகரித்தனர். அதற்கு பாவப்பட்ட பணம் என்றும் பெயர் சூட்டினர்.
பாவப்பட்ட பணத்துடன் மாணவர்கள் சிலர் வடமாகாணசபைக்கு வந்தனர். பணத்தை முதலமைச்சரிடம் வழங்க எத்தனித்தபோது, இந்த விவகாரத்தை அவைத் தலைவர் ஊடாகவே கையாள வேண்டுமென முதலமைச்சர் கூறினார்.
இதையடுத்து, மாணவர்கள் அவைத்தலைவரை சந்திக்க முயன்றபோது, அவைத்தலைவர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். அத்துடன் பணத்தையும் வாங்க மறுத்துவிட்டார்.
இதன்பின்னர் வடமாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மினிடம் இது தொடர்பாக மாணவர்கள் பேசினார்கள். இந்த விவகாரத்தை சபைக்குள் பேசுவதற்கு அஸ்மின் முயன்றபோது, அவைத்தலைவர் அதற்கு அனுமதி மறுத்து விட்டார்.
இதேவேளை, இன்றைய தினம் பாவப்பட்ட பணம் தன்னிடம் வருவதை அறிந்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பிற்கு சென்றுவிட்டார்.
இதனால் பாவப்பட்ட பணத்தை எதிர்க்கட்சி தலைவரிடம் வழங்கவோ, மாகாணசபை பிரதிநிதிகளிடம் வழங்கவோ, சபைக்குள் அது பற்றி பேசவோ முடியாத நிலையேற்பட்டது. தவராசாவிற்கு சார்பாக அவைத்தலைவர் செயற்பட்டு, பண விவகாரத்தை யாரும் பேசாத விதமாக செயற்பட்டுள்ளார்.
தவராஜாவின் வீட்டுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் தவராஜாவின் வீட்டு படலையில் பாவப்பட்ட பணத்தை கட்டிவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது,
இதையடுத்து, கொழும்பிலிருந்தபடி யாழ் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, இது குறித்து முறையிட்டுள்ளார்.


