
காரைதீவு இ.கி.ச.பெண்கள் வித்தியாலய 90வது வருட பூர்த்தியை முன்னிட்டு கல்விக்கண்காட்சி
( சகா) காரைதீவு இ.கி.ச.பெண்கள் வித்தியாலய 90வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஆக்கத்திறன் வெளிப்பாட்டுக் கல்விக்கண்காட்சி (10) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல் கௌரவஅதிதிகளாக பிர தி க்கல்விப்பணிப்பாளர்களான டாக்டர் உமர்மௌலானா எம்.அரபாத் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கிழக்குமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் எஸ்.திலகராஜா பிரதம பொறியியலாளர் பி.இராஜமோகன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.



