
சமூர்த்தி பாதுகாப்பு நிதி எவ்வாறு மோசடி செய்யப்பட்டது?
(Mohamed Nasir) சென்றவாரம் சமூர்த்தி பாதுகாப்பு நிதியிலிருந்து 70 லட்சம் ரூபாவை விடுவிக்கக் கோரி, கச்சேரி கணக்காளரும், இரண்டாம் நிலை அதிகாரியும் கையெழுத்திட்டு, கவரிங் லெட்டருடன் வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மறு நாள் காலை வங்கியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம்,
"உங்கள் கணக்கில் 70 லட்சம் எடுப்பதற்கு இருப்பு இல்லை " என்ற செய்தி வந்ததும்,
இல்லையே வங்கியில் மேலதிக இருப்பு இருப்பதாக இவர்கள் கூற,
இல்லை, சென்ற வாரம் இதே கணக்கிலிருந்து 57 லட்சம் ரூபா எடுத்திருக்கிறீர்களே என்று வங்கியிலிருந்து விடயத்தை தெரிவித்ததும்
காசோலை பதிவுகளை சரிபார்க்க தொடங்கியுள்ளார்கள்.
57 லட்சம் நாங்கள் எடுக்கவில்லையே? அது சம்பந்தமான தரவுகளை தாருங்கள் என வங்கி முகாமையாளருடன் கச்சேரியால் கேட்டதும்,
உடனடியாக 57 லட்சம் காசோலையின் போட்டோ பிரதியையும், கவரிங் லெட்டரின் போட்டோ கொப்பியையும் அனுப்பி வைக்கிறார்கள்.
அதனை பார்வையிட்டதும் அதிகாரிகளால் நம்பவே முடியவில்லை.
நாங்கள் கையெழுத்திடாத காசோலை, ஆனாலும் எங்கள் இருவரினதும் கையெழுத்துக்கள் சிறிதளவேனும் மாற்றமின்றி வைக்கப்பட்டிருக்கிறதே.ஆனால் கவரிங் லெட்டரில் உள்ள சில வசனங்கள் மேலும் சந்தேகத்தை அதிகரித்ததால்
உடனடியாக விடயம் GA அவர்களுக்கு சொல்லப்படுகிறது.
விரைந்து செயற்பட்ட GA. இந்தப்பணம் எந்த வங்கிக்கு மாற்றப்பட்டு, யார் மீளப்பெற்றிருக்கிறார் என்ற தகவலை வங்கி மூலம் எடுங்கள் என்று ஆலோசனை கூற அவ்வாறே செயற்பட்ட அதிகாரிகளுக்கு திடுக்கிடும் அறிக்கைககள் கிடைத்திருக்கிறது.
இந்தப்பணம் செங்கலடி மக்கள் வங்கிக்கு மாற்றலாகி, அங்கு கணக்கு வைத்திருக்கும் ஆறுபேருக்கு தலா 950000/=(ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம்) ரூபா படி மாற்றப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தகவலை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உடனடியாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, புலனாய்வுப் பொலிசாரின் துணையுடன் வங்கியில் பணம் மாறப்பட்ட ஆறு பேரையும் முதலில் கைது செய்ய வேண்டுமென அன்று மாலை 07.00 மணியளவில் வெளியாகும் போது,
ஆறு சந்தேக நபர்களும் கோப்பாவெளி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் .
அனைவரும் பெண்கள் என்பதால், இவர்களை கைது செய்ய பெண் பொலிசாரையும் அழைத்துக் கொண்டு
பயணம் கோப்பாவெளியை நோக்கி தொடங்குகிறது.
இவர்கள் ஆறுபேரையும் சரியாக அடையாம் கான அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு அவரையும் அழத்துக் கொண்டு செல்கிறார்கள்.
குறித்த ஆறு பெண்களும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இலகுவாக அவர்களை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இவர்கள் ஆறுபேரிடமும்,
உங்கள் வங்கிக் கணக்குக்கு 950000/= ரூபா வரவாகியுள்ள விடயம் பற்றி புலனாய்வுத் துறையினர் விசாரிக்க,
அனைவரும் ஒரே கருத்தையே தெரிவித்துள்ளனர்.
இந்த பணம் மூலம் எங்களுக்கு வீடு கட்டித்தரவிருப்பதாக கூறி, எங்கள் வங்கிக் கணக்கிலக்கத்தையும், அடையாஅட்டை இலக்கத்தையும் எங்கள் பகுதி பெண் ஒருவர் மூலமாக கொடுத்த போது,
அக் கணக்குக்கு பணம் வந்திருப்பதாகவும்,
அப்பணத்தை உடனடியாக வந்து எடுத்துத்தருமாறும் இப் பெண்ணிடம் எங்கள் பெயர்களை பெற்றுக்கொண்ட ஐயர் ஒருவர் CALL எடுத்து சொன்னார்.
எங்கள் ஆறுபேரில் இருவர் அன்று இல்லாததால் நாங்கள் நான்கு பேரும் செங்கலடி மக்கள் வங்கிக்கு சென்ற போது,
ஐயர் மூலமே 09 லட்சத்துக்கு சிலிப் நிரப்பப்பட்டு பணத்தை எடுத்துக்கொண்டு வாங்க, நான் பக்கத்து கடையில் நிற்கிறேன் என்றார்.
அவ்வாறே நான்கு பேரும் 36 லட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு, ஐயரிடம் கொடுத்தோம்.
மிகுதி 50000/= ரூபா உங்கள் வங்கி கணக்கில் இருப்பதால் அதனை உங்கள் தேவைக்கு பயன்படுத்துங்கள், வீட்டு விடயம் விரைவாக நடக்கும் என்று சொல்லிவிட்டு,
மற்றைய இருவரினதும் பணம் திரும்பிவிடும் என்று சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் என தெரிவிக்கின்றனர்.
ஐயர் எங்கு இருக்கிறார் என கேட்டபோது,
"எங்களுக்கு ஆளைத்தான் தெரியும் இடம் தெரியாது "என்று சொல்ல. உடனடியாக. ஆறுபேரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு,
பணத்தை பெற்றுக்கொடுக்க முன்னின்ற பெண்ணை தேடி அவரது வீடு செல்கின்றனர்.
அங்கு அவரது கணவனும், 15 வயது மகனும்தான் இருக்கிறார்கள்.
இப் பெண் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது , கணவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அப் பெண் பேசுவதை அறிந்த புலனாய்வுத்துறையினர் சடுதியாக கணவரிடமிருந்த தொலைபேசியை கைப்பற்றி அவருடன் பேசுகிறார்கள்.
விடயத்தை மிகவும் அமைதியாக அப்பெண்ணுக்கு தெரிவித்து, உங்கள் முறைப்பாட்டை தந்துவிட்டு செல்லுங்கள் என்ற போது,
நான் பங்குடாவெளியில் நிற்பதால் உடன் வரமுடியாது என்று தெரிவிக்க, இல்லை நாங்கள் பங்குடா வெளி சந்திக்கு வருகிறோம், நீங்க அங்கு வாங்க என்று பொலிசார் சொல்ல, சரியென்ற இணக்கப்பாட்டுடன் வாகனம் இரவு 11.00 மணியளவில் பங்குடா வெளி நோக்கி நகர்கிறது.
பங்குடா வெளி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று பங்குடாவெளி சந்தியில் நிறுத்தி செல்வதை பொலிசார் அவதானித்துள்ளனர்.
சந்தியை அடைந்ததும் பெண் மணியை காணவில்லை, தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.
சிலவேளை காரில் ஏறிச்செல்லலாம் என கருதிய பொலிசார், அந்தக்காரை துரத்தி செங்கலடி பிரதான வீதியில் பிடிக்கிறார்கள்.
காருக்குள் சாரதியை தவிர வேறு யாருமிருக்கவில்லை.
சிலவேளை சாரதி , ஐயராக இருக்குமோ என சந்தேகித்து அழைத்து வந்த பெண்களிடம் சாரதி காட்டப்படுகிறார்..
இவரில்லை என்றதும்,
மீண்டும் கோப்பாவெளி நோக்கி அப்பெண்ணின் வீட்டுக்கு செல்கிறார்கள்.
அயலிலுள்ள சனங்கள் எல்லாம் கூடி நின்று கதைத்துக் கொண்டிருக்கும் போது, அப் பெண்ணின் வீட்டுக்குள் பொலிசார் சென்றபோது , கணவனும், மனைவியும் இருக்கவில்லை , மகன் மாத்திரம்தான் இருந்துள்ளான்
இருவரும் இப்பதான் ஐயா இருந்தார்கள், உங்களைக் கண்டதும் காட்டுக்குள் ஓடி ஒழிந்திருக்கிறார்கள் என்று அயலவர்கள். தெரிவிக்க
நடுநிசியில் காட்டுக்குள் தேடுதல் நடாத்துகிறார்கள், கண்டுபிடிக்க முடியவில்லை.
திரும்பிவந்த பொலிசார் அப்பெண்ணின் மகனிடம்,உங்க அம்மா , அப்பாவுடன் நெருக்கமாக பழகும் ஐயரை தெரியுமா? என கேட்டபோது,
இவர்கள் தெரிவிக்கும் ஐயர் என்பவரிடம், எனது அப்பா ஒரு வருடத்துக்கு முன்பு ஆட்டோ வாங்கியிருக்கிறார், எனக்கு ஆளைத் தெரியும் இடம் தெரியாது என்று சொல்லிவிட்டு
மட்டக்களப்பிலிருக்கும் எனது மாமிக்கு, அந்த. ஐயர் இருக்கும் இடம் தெரியும் , மாமிதான் அவருடைய ஆட்டோவை வாங்கிக் கொடுத்த என்றும் சொல்லியுள்ளார்.
அதன் பின் அச் சிறுவனையும் ஏற்றிக்கொண்டு, மாமியின் வீட்டைக் கண்டுபிடிக்க அதிகாலை 02.00மணியளவில் மட்டக்களப்பை நோக்கி வாகனம் செல்லத்தொடங்குகிறது.
(#மிகுதி #தொடரும் ,