
திருகோணமலை வீதியில் யுவதிக்கு நேர்ந்த கொடூரம்!
தம்பலாகமத்தைச் சேர்ந்த பிரியதர்சினி திருகோணமலையில் ஶ்ரீ சண்முகா பெண்கள் கல்லூரியில் வர்த்தகப்பிரிவு படித்து வருகிறார்.
தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைக்கு சகோதரியுடன் வீதியின் ஓரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த போது மதுபோதைக் களிப்பில் வாகனத்தைச்செலுத்தி வந்த கிண்ணியாவைச் சேர்ந்த முஸ்லிம்களால் இக்கொலைச்சம்பவம் நிகழ்த்தப்பட்டது.
வாகனம் தாறுமாறாக சென்று ஓரத்தில் சென்றுகொண்டிருந்த பிள்ளைகள் மீது தாக்கியதை வீதியல் நின்றவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது அத்துடன் சில பாதுகாப்பு கமராக்களிலும் வாகனம் பதிவாகியுள்ளது.
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட இக்கொலைச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது.
எவ்வளவோ பாதுகாப்பு நடைமுறைகளை புலனாய்வு உத்திகளை மேற்கொள்ளும் பாதுகாப்புத்தரப்பினர் குற்றவாளிகளைக்கண்டுபிடிக்காதது சந்தேகத்தை எழுப்புகின்றது.
கிண்ணியாவைச்சேர்ந்த மேற்படி கொலைகாரர்கள் கிண்ணியா அரசியல்வாதிகளிடம் தஞ்சம் கோரியிருக்கின்றனர்.
இதனால் கிண்ணியா காவல்துறை இவர்களை கைதுசெய்வதில் அசமந்தம் காட்டிவருகின்றது.
ஈகைத் திருநாளைக்கொண்டாடும் ஒரு சமூகம் குறித்த நாளில் நிகழ்நத இவ்வாறான ஈனச்செயலுக்கு ஆதரவு வழங்கி குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்பது மாபெரும் குற்றமாகும் இஸ்லாத்துக்கே பேரிழுக்காகும்.
இவ்வாறான செயல் இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும். ஒரு சில நபர்களின் குற்றச்செயல் ஒட்டுமொத்த இனைத்தையும் பாதிக்காது முஸ்லிம் அரசியல்வாதிகளும், பள்ளி நிர்வாகங்களும், இன மத நல்லிணக்க சபைகளும் செயற்படவேண்டும்.
சலமூகங்களுக்கிடையிலான மோதல் நிகழ்ந்த பின் இவை எதுவும் பலனற்றதாகிவிடும். இன்னும் கண்டி சம்பவம் நிகழ்ந்தமைக்கான காரணத்தை எவரும் மறந்துவிடக்கூடாது.