
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்தும் கௌரவிப்பு விழா
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்தும் கௌரவிப்பு விழா அரசடி மகாஜனக் கல்லாரி மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெறும் இன்நிகழ்வில் நான்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் இலங்கை முதல் சர்வதேசம் வரை இசைத் துறைக்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பின் கலைக்குடும்பத்தைச் சேர்ந்த சங்கீத ஆசிரியை சாந்தினி தர்மநாதன் (சங்கீதம்),
சிங்கப்பூர் அப்சராஸ் கலையக நடன விரிவுரையாளரும் மற்றும் சர்வதேசத்தில் தனது நடன நிகழ்ச்சிகளை வழங்கி கலை ஆர்வலாகளிடம் தனக்கென ஓர் தனியான தடம்பதித்த பரதநாட்டியக் கலைஞர் மோகனப்பிரியன் தவராஜா(நடனம்),
இலங்கை வானொலி, தேசிய பத்திரிகைள் மற்றும் சஞ்சிகைகளில் தனது கவிதை ஆக்கங்களைப் பிரசுரித்து கவியரங்குகளையும் நடாத்தி மற்றும் கொழும்பு செட்டியார் தெருவில் நகைகளை வடிவமைப்பதில் சிறந்து விழங்கிய பாண்டியூர் பொன் நவநீதன் (கவிதை),
மற்றும் மீன்பாடும் தேனாட்டிற்கு புகழ் சேர்த்த முழக்கம் முருகப்பா இம்மண்ணிற்குச் செய்த பணியை நினைந்து நாட்டிய வித்தியா நடனப் பட்டறையின் மிருதங்கப் பயிற்றுனராக கடமை புரிந்து வரும் மிருதங்க வித்துவான் இரா நித்தியானந்தன் (மிருதங்கம்)ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

