
வீரம் விளை நிலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மகனுக்கு எமது வாழ்த்துக்கள் !
(சசி)
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,
மட்டக்களப்பு, உன்னிச்சை 6 ஆம் கட்டை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவன் செல்வன் ஜெ.துகிந்தரேஷ் 196 புள்ளிகளைப் பெற்று மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினையும் தேசிய ரீதியாக நான்காம் இடத்தினையும் பெற்று தனக்கும் பாடசலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கட்டமைப்பு வசதிகள் குறைந்த கிராமமான உன்னிச்சையில் இருந்து இம் மாணவன் சாதித்துள்ளமையானது மிகவும் பாராட்டுதலுக்கும் பெருமைப்படத்தக்கதுமான விடயமாகும்.
எமது Batti Naatham ஊடகப்பிரிவு மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவன் ஜெ.துகிந்தரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்




