
சபாநாயகரின் அதிரடி உத்தரவு!
சிறிலங்காவின் நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை அழைத்து பேசியுள்ளார்.
இதில் நீதியான ஊடக சேவையினை நாட்டு மக்களுக்காக வழங்குமாறு குறித்த இருவரையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடக அமைச்சின் செயலர் சுனில் ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் சோமரத்ன திஸாநாயக்க ஆகிய இருவரையுமே சபா நாயகர் இவ்வாறு அழைப்பு விடுத்து மேற்படி பணித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து அரச ஊடகங்களையும் அறிவுறுத்தவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.