
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் - மெல்பேர்ண்
பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 31-ஆவதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருவது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் தலையாய கடமையாகும்.
எமது சுதந்திரமான வாழ்வுக்காக முப்பது நாட்கள் தியாகவேள்வியில் தன்னை உருக்கி தன்னுயிர் ஈந்த தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவுகூருகின்ற இப்புனிதமான நிகழ்வில் தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்கள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நடைபெறும் இடம்: Preston Town Hall, 284 Gower Street, Preston, VIC 3072.
காலம்: 13-04-2019. சனிக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை.
மேலதிக தொடர்புகளுக்கு: 0433 002 619 & 0404 802 104.