
அறநெறிப்பாடசாலையால் விகாரி வருட கொண்டாட்டம்.
(மலரவன்) எருவில் சிறி முத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலையின் ஏற்பாட்டில் இன்று(14) சித்திரை வருடப்பிறப்பன்று பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எருவில் அறநெறி பாடசாலையானது சமூகத்தில் பல சமய பணிகளை சம காலத்தில் நடாத்தி வருகின்றது. அதனடிப்படையில் இன்று அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சிவசிறி சோதிடமணி க.வடிவேல் குருக்கள் அவர்களினால் அறக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் எருவில் கண்ணகி மகா வித்தியாலய அதிபரும் மாரியம்மன் ஆலய தலைவருமாகிய சா.பரமானந்தம் அவர்களினால் கருத்துரை வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கைவிசேடம் வழங்குதல் மற்றும் பெரியோர்களினால் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு என்பன தமிழ் பாரம்பரியத்துடன் நடாத்தப்பட்டது.
நிகழ்வில் மாரியம்மன் ஆலய வண்ணக்கர் மு.இளைஞன், பொருளாளர் பொ.வினோதன் ஆகியோருடன் நலன் விரும்பிகளும் பங்குபற்றினர் நிகழ்வுகள் அனைத்தும் அறநெறி பாடசாலை அதிபர் நவ.கனகரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. அறநெறி ஆசிரியர்களும் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.




