
பத்தாண்டுக்கு முன்னும் பின்னும்!
முள்ளிவாய்கால் பத்தாண்டு நினைவுக்கவிதை:கவிஞர் அம்பிளாந்துறையூர் அரியம் வரிகள்!
பத்தாண்டுக்கு முன்னும் பின்னும்!
பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் பதறியது ஒர் இனம்!
பரிதவித்து உறவை பறிகொடுத்து அழுத்து! புலம்பியது ஒப்பாரி வைத்து ஆர்பரித்தது!
ஆம் 2009,மே 18,•••••!
நாங்கள் ஏங்கினோம்!
கதறினோம்!
கத்தினோம்!
ஆனால்...!
பால்சோறு கட்டை சம்பல் வழங்கி கொண்டாடியது இன்னோர் இனம்!
மாடுவெட்டி கந்தரி கொடுத்து பட்டாசு கொழுத்தியது வேறோர் இனம்!
இனப்படுகொலையால் எம்மினம் அழிந்தது!
எள்ளி நகை செய்து எம்மவரை தூற்றினர் சிலர்
எல்லாம் முடிந்ததென்று வாய் விட்டு சிரித்து விழாவும் நடத்தினர்!
சந்தி வீதி வீடுகள் எல்லாம் இனிப்புக்கொடுத்து இனப்படுகொலையை சுவைத்தனர்!
கலந்தர் கடையிலும் காமினியின் வீட்டிலும் கண்ட கண்ட ஊரிலும் களியாட்டம் விழா காலை மாலை எல்லாமே!
கலகலப்பு மகிழ்ச்சி கொண்டாட்டம்!
கண்ணீர் சிந்திநாம் கவலையுடன் தான் இருந்தோம்!
பாராளுமன்றத்திலும் எமை பார்வையால் கேலிசெய்தார்!
படைகளுக்கு புகழ்மாலை போட்டு ஊர்வலமும் வைத்தார்கள்!
பார்த்துக்கொண்டு பாவிகள் நாம் ஏங்கினோம்!
இன்று பத்தாண்டுக்குபின்••••• !
ஆம் 2019,மே,18..•••!
பால்சோறு கொடுத்தவர்களும்!
பட்டாசுகொழுத்தியவர்களும்!
மாறி மாறி மோதல் செய்யும் கோலம்!
ஆண்டவன் நியதி இது என்பதா?
ஆணவம் சொல்லும் கதை என்பதா?
மாண்டோரை நினைத்து வணங்கும் பத்தாண்டில்!
மாற்றம் ஏதும் எமக்கில்லை இருந்தும்!
காட்சிகள் கண்டோம் கண்முன்னே நாம்!
முள்ளிவாய்கால் நினைவுகளுடன்!
முழு நாடும் அச்சம் கொண்டு தவிக்கிறது!
எம்மை பார்த்து ஏளனம் செய்தவர்கள்!
தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிர்கிறார்கள்!
ஓ.. மனிதனே..!
எல்லோருக்கும் எல்லாம் வரும்!
இறைவனின் நியதி எவராலும் மாறாது!
புரிந்துகொள்வாய்! அறிந்து கொள்வாய்!
முள்ளிவாய்கால் முடிவல்ல ..!
மூடிவைக்கும் புத்தகமும் அல்ல..!
அது வரலாறு கண்ட இனப்படுகொலை நாள்!
வலிசுமந்தவர்கள் வாழும் வரை..!
வதை தந்தவர்கள் உணரும் வரை..!
வாழ்வுக்கான எமது பயணம் ஒயாது!
பத்தாண்டுக்கு முன்னும் பின்னும் உணர்வாய்!
-அம்பிளாந்துறையூர் அரியம்-