இலங்கைத்தீவும் மலையகத் தமிழர்களும்
லோ.தீபாகரன்)அன்று தொடக்கம் இன்றுவரை இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருப்பவர்கள் மலையக தமிழர்களே இவர்கள் இல்லை என்றால் இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டு பட்டியலில் இருந்து விலகிச் சென்றிருக்கும் என கூறலாம் இவர்களின் கடின உழைப்பு போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகும்
1820 - 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் அங்கு வாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டிக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர்.
தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு ரப்பர் தேயிலை காப்பித் தோட்டங்களில் வேலை செய்பவர்கள். இவர்களின் பயணக் கதை மிக மோசமானது. ஒப்பந்தக் கூலி முறையில் தென்தமிழகத்தில் பிடித்து இலங்கை காடுகளில் வழி நடத்தி அழைத்து வரும்போதே நாலில் ஒரு பகுதியினர் சாவை அணைத்துக் கொண்டனர்.
இந்தக் கூலிகளுக்குப் பருவநிலை பாதித்தால் வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை. மாதக் கணக்கில் பட்டினிப் போராட்டம் ஆயுள் கைதிகளைப் போன்று மாதக்கணக்கில் பட்டினிப் போராட்டம். ஆயுள் கைதிகளைப் போல் இவர்களது வாழ்விடங்கள் சிறு சிறு தடுப்புகளைக் கொண்டிருக்கும் அறைகளைக் கொண்டது.மகிழ்ச்சி துன்பம் இறப்பு பிறப்பு யாவும் இந்த அடுத்தடுத்து இருக்கும் சிறு சிறுதடுப்புகளில்தான்.
கால்நடையாக இராமேஸ்வரம் வரையும் அதற்குப் பிறகு தோணியிலும் மன்னார் கொண்டு செல்லப்பட்டனர். மன்னார் அடைந்ததும் அங்கிருந்தும் பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய தென்பகுதி மலைகளுக்கும் கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.இப்படி இவர்கள் உடல் நலிவுற்று அங்கு போய்ச் சேரும்போது வழியில் ஏற்படும் மரணங்களுக்குப் பஞ்சமில்லை.
இந்தக் கூலிகளுக்குப் பருவநிலை பாதித்தால் வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை. மாதக் கணக்கில் பட்டினிப் போராட்டம் ஆயுள் கைதிகளைப் போன்று மாதக்கணக்கில் பட்டினிப் போராட்டம். ஆயுள் கைதிகளைப் போல் இவர்களது வாழ்விடங்கள் சிறு சிறு தடுப்புகளைக் கொண்டிருக்கும் அறைகளைக் கொண்டது.மகிழ்ச்சி துன்பம் இறப்பு பிறப்பு யாவும் இந்த அடுத்தடுத்து இருக்கும் சிறு சிறுதடுப்புகளில் தான்.
இவர்கள் மலையை விட்டுக் கீழே இறங்குவதற்கும் சிறிய நிலங்களைக் கூடச் சொந்தமாய் பெறுவதற்கும் உரிமையற்றவர்கள். இதன்மூலம் கண்டியச் சிங்களப் பகுதிகளில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அடிமைகள் போன்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் ஆதியிலிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும் சிங்கள ஆட்சியாளர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன.அதே சமயம் தமிழ்-சிங்கள பகை மூளுமானால் முதலில் தாக்குதலுக்கு ஆளாவதும் இவர்களே.
இவர்கள் மலையை விட்டுக் கீழே இறங்குவதற்கும் சிறிய நிலங்களைக் கூடச் சொந்தமாய் பெறுவதற்கும் உரிமையற்றவர்கள். இதன்மூலம் கண்டியச் சிங்களப் பகுதிகளில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அடிமைகள் போன்று வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் ஆதியிலிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும் சிங்கள ஆட்சியாளர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன.அதே சமயம் தமிழ்-சிங்கள பகை மூளுமானால் முதலில் தாக்குதலுக்கு ஆளாவதும் இவர்களே.
1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் நிலவியது. 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி (காஃபி) பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது.
1867இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால் தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
வரும்வழியும் வந்து குடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் கடலில் மூழ்கியதால் 120 பேர் செத்துமடிந்தனர் என்ற வரலாறும் இருக்கின்றது.
இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் - மலையகத் தமிழர் என்றும் இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.
மாத்தளை கண்டி நுவரெலியா பதுளை இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான மலையகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்களுடன் தெலுங்கர் மலையாளிகளும் தொழில் நிமித்தம் இங்குவந்தனர்
காடுமேடாகவும் கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை - தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன் இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும் அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
நாடற்றவர்களான மலையகத் தமிழர்
1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947 - 1948 களில் கொண்டுவரப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய ஒப்பந்தம் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் பிரஜாவுரிமைச் சட்டங்களினால் பறிக்கப்பட்டது. இதன்பின்னர் 3 தசாதப்தங்களுக்கு மேலாக நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர்இ சிங்களத்தேசிய வாதிகள் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இச்சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.
மலையகத் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால் 7 லட்சம் வரையான மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஏற்றப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையே 1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி (சிறிமா - சாஸ்திரி) ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி 525000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தால் 150000 பேர் விடுபட்டுப் போயினர். 1967ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தால் இந்தியக் குடியுரிமை பெறுவோர் இலங்கை குடியுரிமை பெறுவோர் நாடற்றவர் என மூன்றாக பிரிக்கப்பட்டனர்.
போராட்டமும் அரசியல் அங்கீகாரமும்
கவ்வாத்து வெட்டப்படுவதுபோல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டுஇ வஞ்சிக்கப்பட்ட - தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினருக்கு குடியுரிமை வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
1952ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. 1958ஆம் குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய "நாடற்றவர்களாக" கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்கும் விசேஷ சட்டம் 1988 நவம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. இந்திய சமுதாயத்தினர் "நாடற்றவர்" என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 26ம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம்" புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
இந்த சட்டத்தின் பிரகாரமே இந்திய சமுதாயத்தினர் - விசேடமாக தோட்டப்புற மக்கள் இன்று வாக்குரிமை பெற்று ஏனைய சமூகத்தோடு அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்துள்ளனர். இதுவே இம்மக்களின் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்திலும்இ மாகாண சபைகளிலும் பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிசமைத்துக்கொடுடத்தது.
வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய மலையக சமூகம்
1970கள் வரை இலங்கையின் பொருளாதாரமானது பெருந்தோட்டப் பொருளாதாரத்திலேயே தங்கி இருந்தது. நேரகாலம் பாராது கடின உழைப்பின்மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் உரமூட்டினார்கள். இருந்தும் கைக்கூலிகள் என்ற கண்ணோட்டம் மாறவில்லை. நாட்சம்பளம் பெறும்தொழிலாளர்களாகவே நாட்களை நகர்த்துகின்றனர். கல்வி சுகாதாரம் போக்குவரத்து வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டன.
மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்திலேயே இருந்தது. இந்நிலைமை இன்று முழுமையாக மாறிவிட்டது என பெருமிதம்கொள்ளமுடியாது. ஒரு சில பகுதிகளில் அந்த அவலக்காட்சிகள் அப்படியே தொடரத்தான்செய்கின்றன என்று மலையக மக்கள் சார்பாக குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் கரிசணை
மலையக மக்களின் நிலையைக் கருத்திக் கொண்டு வீட்டுத்திட்டமொன்றின் ஊடாக நேசக்கரம் நீட்டியது இந்திய அரசு. அந்தவீட்டுத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மலையக மக்களின் சுகாதாரத்துறை கல்வித்துறை என்பவற்றை மேம்படுத்துவதிலும் அந்நாட்டு அரசு அக்கறைக் கொண்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அன்றைய சிலோனில் ஒரு ரப்பர் மரம்
இதற்காக பல மருத்துவமனைகளை அமைக்க இந்திய அரசாங்கம் நிதியுதவிகளைச் செய்துள்ளதுடன் மலையக மாணவர்களுக்கான புலமைப்பரீசில் உதவிகயையும் வழங்கிவருகின்றது.
மாறிவரும் மலையக சமூகம்
பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலைநகரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர். கல்வியிலும் மலையக சமூகம் முன்னேறி வருகின்றது. அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.
வளர்ந்து வரும் சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்பட்டாலும் கொழுந்து பறிக்கும் இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவரகளின் அடிப்படைச் சம்பளம் நாளொன்றுக்கு இலங்கை ரூபாவில் 500ஆகவே இருக்கிறது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்திருப்பதால் இன்றும் சம்பள உயர்வைக் கோரிய ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் நடந்து வருகின்றன.
இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழும் ஓர் இனம் "இந்திய வம்சாவழியினர்" இந்திய வம்சாவழி தமிழர்" "மலையக தமிழர்" என பல்வேறு சொல்லாடல்களால் நீண்ட நாட்களாகவே அல்லோலக்கல்லோலப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இலங்கையில் உள்ள தேசிய இனங்களில் ஒரு இனமாக "மலையக தமிழர்" அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இன்று மலையகத்தின் பேசுப்பொருள்.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் கோப்பி பயிர் செய்கைக்காகவும் பின்னர் தேயிைலை பயிர் செய்கைக்காகவும் தென்னிந்திய கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட பெரும்பான்மையானோரையும் அத்தொழிற்துறைகளோடு தொடர்புடைய ஏனையோரையும் இதர சிறு தேவைகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களையும் கொண்ட இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் ஒரு மக்கள் கூட்டத்தையே பிரதானமாக "மலையக தமிழர்" என அழைக்கின்றோம். இப்பதத்தினுள் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களால் குடிபெயர்ந்தும் பல்வேறு கலவரங்களால் குடிப்பெயர்ந்தும் இலங்கையின் பல்வேறிடங்களில் (குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில்) வாழும் மக்களும் உள்ளடங்குவர். மத்திய மலைநாட்டில் மட்டுமின்றி காலி மாத்தறை களுத்துறை போன்ற கறையோர பிரதேசங்களிலும் பெருந்தோட்ட தொழிற்துறையை சார்ந்து வாழும் மக்களும் இதனுள் அடங்குவர். ஆக "மலையக தமிழர்" என்பதனை வெறும் புவியில் அடிப்படைகளைக் மட்டும் கொண்டோ அல்லது தொழிற்துறையை மட்டும் கொண்டோ வரையறை செய்துவிட முடியாது. இதனை ஒரு பரந்த அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.
"மலையகத்தமிழர்" என்போர் இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களின் கீழ் வாழ்பவர்கள்.
"இலங்கையின் இந்தியத் தமிழர்" எனும் போது மலையகத் தமிழரரும் உள்ளடங்கும். அதேவேளை இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கப்படும் (இறக்குமதி) உடை வணிகத்தில் முன்னனியில் இருப்பவர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால் உடை கடைகளைப் பொருத்தமட்டில் 2000 ஆண்டுக்கு முன்பு வரை இலங்கையில் பிரசித்திப் பெற்ற கடைகளாக கொழும்பு புறக்கோட்டையில் உள்ள (ரஞ்ஞனாஸ் லலிதா போன்ற) கடைகளுக்கு இணையாக எந்த கடைகளும் இருக்கவில்லை. இவை இந்தியத் தமிழர்கள் உடையதே.
தவிர (தங்கம்) நகை வணிகத்தில் இன்றளவும் இந்தியத் தமிழர் அளவுக்கு இலங்கையில் எவரும் கோளோச்சவில்லை. கொழும்பு செட்டியார் தெருவில் இருக்கும் பாரிய நகைக்கடைகளில் உரிமையாளர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இவை தவிர இன்னும் பல்வேறு மட்டங்களிலும் உயர் நிலையில் இந்திய வம்சாவளி தமிழர் உள்ளனர். முத்தையா முரளிதரன் போன்றோரும் கண்டி நகரில் வணிகர்களாக இருக்கும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒருவரே மேலும் பேராசிரியர் மூக்கையா போன்ற சாதனை தமிழரையும் கூறலாம்
1983களில் இனவன்முறைகளின் போது வவுனியா கிளிநொச்சி மன்னார் என வடக்கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தோரையும் குறிப்பதாகக் கொள்ளமுடியும். ஆனால் இலங்கையின் போர்த்துகீசரின் வருகைக்கு முன்னர் இருந்து தற்போதும் கொழும்பில் தொகை வணிகர்களாகவும் நகை வணிகர்களாகவும் இருப்போர் மலையகத் தமிழர் என அழைக்கப்படுவதில்லை.
நீர்கொழும்பு புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் போர்த்துக்கீசரின் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கையில் வசிப்பவர்கள். இவர்கள் பற்றிய சரியான தரவுகள் எதுவும் இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் இல்லை. அதிகமானோர் தமிழ் பாடசாலைகள் அழிக்கப்பட்டு சிங்களப் பாடசாலைகளை நிறுவி சிங்கள மயமாக்கலினால் சிங்களமாகிப் போயினர்.
இந்தியாவில் இலங்கைத் தமிழர்களைப்பபற்றி தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு மலையக மக்களைப்பற்றி தெரியாது என்பது கசப்பான உண்மை. அவர்கள் அடிக்கடி சொல்லும் தொப்புள் கொடி உறவு யார் என அதனை உச்சரிப்பவர்களுக்கே தெரியாது.
வடகிழக்கில் மலையக தமிழர்கள்
எமது நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்னர் இனவன்முறைச் சம்பவங்கள் பல தடவைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இவற்றில் 1958 1977 1983 காலப்பகுதியில் இடம்பெற்ற இன வன்முறைகள் காலத்தால் மறக்க முடியாதவை. இந்த காலப்பகுதியில் பெருமளவில் மலையகத் தமிழர்கள் இடம்பெயர்வுக்குள்ளானர்கள். கண்டி மாத்தளை மாவட்டத்தை சார்ந்த மலையகத் தமிழர்களும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசித்த இந்திய வம்சாவளி தமிழர்களும் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். பதுளை மாவட்டத்தை சார்ந்த மலையகத்த தமிழர்கள் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தனர். தென்னிலங்கையில் காலி களுத்துறை இரத்தினபுரி மாவட்டத்தை சார்ந்த தமிழர்களும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
இவர்கள் தங்கி வாழவென கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்கள் உருவாக்கப்பட்டன முதன்முதலாக 1958ஆம் ஆண்டு தர்மபுரம் கிராமம் உருவாக்கப்பட்டது.
இந்த கிராமத்தில் அநுராதபுரம் கெகிராவ கலிகமுவ மஹா இலுப்பள்ளம திஸ்ஸராம பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களே தொடர்க்கத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர். குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் மேட்டு நில காணி வழங்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அக்கிராமத்திற்கு பாடசாலை வைத்தியசாலை அஞ்சலகம் போன்ற பொதுநிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டன. இதுபோலவே ஜெயபுரம் ஊற்றுபுலம் கோளாவில் காந்தி கிராமம் உழவனூர் முல்லைத்தீவு மாவட்டத்தில் றெட்பானா போன்ற கிராமங்களும் உருவாக்கப்பட்டன.
1972ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காணிச் சீர் திருத்த சட்டத்தின் விளைவாக பெருந்தோட்டங்கள் அரசுடமையாகக்கப்பட்டதன் விளைவாக மலையக பகுதியிலிருந்து பரவலாக வடக்கு கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். எழுபதுகளின் முற்பகுதியில் அரிசி மா போன்ற உணவு பண்டங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. அரசுடமையாக்கப்பட்ட பல தோட்டங்கள் காணியற்ற சிங்கள கிராம வாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. பெருமளவான மலையக தமிழர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை அற்றதன் விளைவாக அவர்கள் அகதிகளாகவே இடம்பெயர நேர்ந்தது.
இவ்வாறான இடம்பெயர்ந்த இந்த சமூகத்தினர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தாமே காடுகளை வெட்டி கழனியாக்கி குடியமர்ந்தார்கள். இவ்வாறு குடியேறிய மலையகத் தமிழர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உதயநகர் மேற்கு உதயநகர் கிழக்கு தொண்டமான் நகர் விவேகானந்தா நகர் பாரதிபுரம் செல்வாநகர் மலையாளபுரம் கிருஷ்ணபுரம் கோளாவில் அம்பாள்குளம் வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்டம் மாயவனூர் சாந்திபுரம் மருதநகர் பன்னங்கண்டி இரணைமடு அறிவியல் நகர் சிவபுரம் மற்றும் கிளிநகர் கிளிபுறநகர் பகுதியிலும் செறிவாக வாழ்கின்றனர். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் புறநககர் பகுதி கோரக்கள் கட்டு தர்மபுரம் மேற்கு தர்மபுரம் கிழக்கு பெரிய குளம் கட்டைக்காடு ஜம்புக்குளம் மயில்வாகனபுரம் பிரமன்தளாறு குமாரசாமிபுரம் புளியம் பொக்கண முசிறிபிட்டி ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் றெட்பானா பாரதிபுரம் வள்ளுவர் புரம் இளங்கோ புரம் சுதந்திர புரம் தேராவில் இருட்டுமடு நாச்சிக்குடா நெத்தலி ஆறு குரவில் வள்ளிபுனம் கைவேலி வேணாவில் மாங்கும் நீதிபுரம் முத்தையன் கட்டு மந்துவில் பகுதியிலும் வாழ்கின்றனர்.
இது மட்டுமல்லாம் பூநகரி பிரதேச பிரிவில் ஜெயபுரம் முழங்காவில் முட்டைகொம்பன் பகுதிகளிலும் வசிக்கின்றனர் பளை பிரதேச பிரிவில் இயக்கஞ்சி முகமாலை கிராமங்களிலும் வசிக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் 40 வீதமான மலையக தமிழர்கள் வாழ்வதாக வவுனியா மாவட்ட மலையக சமூக பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்திலும் 20 வீதமான மலையக தமிழர்கள் வசிப்பதாக அந்த மாவட்டத்தின் மலையக சமூக பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கல்லம்பத்தை கிராமத்திலும் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவு கப்பற்துறை கிராமத்திலும் கன்னியா பிரதேசதிற்குட்பட்ட மாங்காய்யூற்று கிராமத்திலும் மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட புலியடிச் சோலை கிராமத்திலும் மலையகத் தமிழர்கள் வசிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி – பதுளை வீதியில் இராஜபுரம் கிராமத்தில் 100வீதமும் மரப்பாலத்தில் 75 வீதமும் மாவலியாறு 100 வீதமும் சின்னப்புல்லுமலையில் 50வீதமும் பெரியபுல்லுமலையில் 40வீதமும் வெலிக்காகண்டியில் 100 வீதமும் கோப்பாவெலியில் 25 வீதமும் கித்துல்வை 25 வீதமும் மற்றும் மட்டக்களப்பு புறநகர் பகுதிகளிலும் மலையகத் தமிழர்கள் வசிப்பதாக இந்த மாவட்டத்தில் குறித்த சமூகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இனி வடகிழக்கு வாழ் மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்தால் அவை யாவும் ஒரு வட்டத்துக்குள் அமைவதாகவே புலப்படுகின்றது. காணி அனுமதிபத்திரம் நீர்பாசன காணி ஏற்று நீர்ப்பாசனம் வீடு மற்றும் மலசல கூட வசதி வேலைவாய்ப்பின்மை உட்கட்டமைப்பு வசதிகள் காட்டு மிருகங்களின் தொல்லை போன்ற இன்னோரன்ன எதிர்பார்ப்புகளுடன் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் கல்லம்பத்தை கிராமத்தில் வாழும் இச்சமூகத்தினர் அடிக்கடி காட்டு யானைகளின் தொல்லைக்குட்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலும் முல்லை மாவட்டத்திலும் இந்திய அரசின் உதவி வீட்டுத் திட்டத்தின் கீழ் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் வெட்டுப்புள்ளி காரணமாக பல குடும்பங்களுக்கு வீடுகள் இடைக்கவில்லை. இறுதியுத்தின்போது பெருமளவில் பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்ட மக்களே என்பதற்கு மாற்று கருத்து கிடையாது.
காணி அனுமதிப்பத்திரம்
இந்த சமூகத்தினர் காடுவெட்டி கழனியாக்கி குடியிருக்கும் காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் பெறுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நிரந்தர வீடு பெறமுடியாதவர்களாகவே உள்ளனர். இறுதிபோர் நிறைவுற்றதன் பின்னர் காணிகள் தொடர்பான பல நடமாடும் சேவைகள் நடந்தேறியுள்ளன . ஆனாலும் இந்த சமுகத்தினர் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியேஇ கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமன்றி வவுனியா முல்லைத்தீவுதிருகோணமலை மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக சமூகத்தினர் செறிவாக வாழும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. சில பாடசாலைகளில் தளபாட வசதிகளும் பற்றாக்குறையாகவே உள்ளன. ஒரு சமூகம் மேம்படுவதாயின் அச்சமூகத்தின் கல்வி நிலை உயரவேண்டும்.

வடகிழக்கில் மலையக தமிழ் உறவுகள்

இந்த சமூகத்தினர் காடுவெட்டி கழனியாக்கி குடியிருக்கும் காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் பெறுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நிரந்தர வீடு பெறமுடியாதவர்களாகவே உள்ளனர். இறுதிபோர் நிறைவுற்றதன் பின்னர் காணிகள் தொடர்பான பல நடமாடும் சேவைகள் நடந்தேறியுள்ளன . ஆனாலும் இந்த சமுகத்தினர் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியேஇ கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமன்றி வவுனியா முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக சமூகத்தினர் செறிவாக வாழும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. சில பாடசாலைகளில் தளபாட வசதிகளும் பற்றாக்குறையாகவே உள்ளன. ஒரு சமூகம் மேம்படுவதாயின் அச்சமூகத்தின் கல்வி நிலை உயரவேண்டும்.
இது இவ்வாறிருக்க திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கல்லம்பத்தை கிராமத்திலும் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவு கப்பற்துறை கிராமத்திலும் கன்னியா பிரதேசதிற்குட்பட்ட மாங்காய்யூற்று கிராமத்திலும் மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட புலியடிச் சோலை கிராமத்திலும் மலையகத் தமிழர்கள் வசிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி – பதுளை வீதியில் இராஜபுரம் கிராமத்தில் 100வீதமும் மரப்பாலத்தில் 75 வீதமும் மாவலியாறு 100 வீதமும் சின்னப்புல்லுமலையில் 50வீதமும் பெரியபுல்லுமலையில் 40வீதமும் வெலிக்காகண்டியில் 100 வீதமும் கோப்பாவெலியில் 25 வீதமும் கித்துல்வை 25 வீதமும் மற்றும் மட்டக்களப்பு புறநகர் பகுதிகளிலும் மலையகத் தமிழர்கள் வசிப்பதாக அறிய முடிகிறது
அதே போல் வடகிழக்கில் இருந்து வடகிழக்கிற்கு வெளியே குறிப்பாக கொழும்பில் இடம் பெயர்ந்த தமிழர்கள்அங்கு பல திருமண பந்தங்கள் மூலம் மலையகத்தமிழர்களுடன் இணைந்து வாழ்கின்றமை குறிப்பிடதக்கதாகும் மேலும் மலையகத்தில் இருந்து வடகிழக்கில் மலையக தமிழர்கள் திருமணபந்தங்களை உருவாக்கியதன் மூலம் தமக்கிடையே பிரிக்கமுடியாத உறவை ஏற்படுத்தி வருகின்றமை ஆரோக்கியமானதாகும்
முதலாளிய வணிகத் தமிழர்:
சிலர் வணிகநிதி ஆதாரத்தைக் கொண்டும் வேறு சிலர் தோட்ட அதிபர்களாகவும் இருக்கின்றனர். கடன் தொழில் செய்யும் செட்டி நாட்டுக்காரர்கள் கூட இதில் அடங்குவர்.கொழும்புச் செட்டித் தெருவில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தமிழரின் நகைக்கடைகள் சிங்களவர் பகுதியில் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டும்.மலையகத் தமிழர்களின் குரலாகக் கருதப்படும் தொண்டமான் சுமார் 800 ஏக்கருக்குச் சொந்தமான தோட்டத்தைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்க-ஜப்பான் கூட்டுறவு பெற்று உலக வங்கியிடமிருந்து 28 கோடி ரூபாய் கடனுதவியைப் பெற்ற தொழிலதிபர் ஞானம் இதில் அடங்குவார். அவருக்கு ஒப்பான குணரத்தினம் மகாராஜா வி.வி.ஜி. போன்றவர்களும் தமிழர்களே.
கொழும்பு மாவட்டத்தில் சின்டெக்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை ஞானம் நடத்துகிறார். இந்தத் தொழிற்சாலையில் ஒப்புக்குக்கூட ஒரு தமிழர் இல்லை. (இருப்பினும் இவரது நிறுவனம் 1983-இல் நடந்த கலவரத்தில் தாக்கப்பட்டது). அதுபோலவே இன்னபிறரது வியாபார நிறுவனங்களும் சிங்களவர்களின் கலவரங்களால் சீர்குலைவதுண்டு.இவர்கள் வடகிழக்குக்கு வெளியே சிங்களவர் பகுதியில் தொழில் நடத்துவதால் ஒவ்வொரு கலவரத்திலும் தாக்கப்படுவார்கள். மீண்டும் அங்கேயே தொழில் தொடங்கி இழந்த செல்வத்தை மீட்பர்.
அன்று தொடக்கம் இன்றுவரை இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருப்பவர்கள் மலையக தமிழர்களே இவர்கள் இல்லை என்றால் இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டு பட்டியலில் இருந்து விலகிச் சென்றிருக்கும் என கூறலாம் இவர்களின் கடின உழைப்பு போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகும்