
மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் புதுவருடத்திற்கான ஆராதனை
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான புத்தாண்டு ஆராதனைகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இன்று நடைபெற்றன.
மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகையினால் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது நாட்டின் சமாதான நிலை உறுதியான சமாதானமாக மாற்றமடைய மன்றாடுமாறு புத்தாண்டு வழிபாட்டின் போது ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை வேண்டுகோள் விடுத்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு விசேட திருப்பலி பூஜைகள் சகல தேவாலயங்களிலும் நடைபெற்றன.பிறந்திருக்கும் 2017 ஆம் ஆண்டு புதுவருடத்தினை வரவேற்கும் வகையில் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன் அடிகளார் உட்பட அருட் தந்தையர்களும் கலந்து கொண்டனர்.
இந்த திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.