அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவா” சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை பூசா சிறைச்சாலையில் இருந்து அளுத்கடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டார். சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.