புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் அடையாளம்
பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்கு காரணமான கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வதகல தெரிவித்துள்ளார். சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed