இளம் பிக்குகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு;மீண்டும் ஒத்திப்போனது வழக்கு!

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைதான பிக்கு தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அம்பாறை – கல்முனைதலைமையக பொலிஸ் பிரிவின் விகாரை ஒன்றில் 3 இளம் பிக்குகள் பாலியல் துன்புறுத்தலுக்குஉள்ளாக்கப்பட்டனர் என்று கூறி தொடரப்பட்ட வழக்குகடந்த புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், கல்முனை விகாரை பிரதம பிக்கு முன்னர்கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.