நாடளாவிய மின்சாரத் தடைக்கு காரணமானவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள்!
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மின் விநியோகத்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை தவறை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாதாந்த சபை அமர்வில் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைக்கையிலே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.ஆர்.எம் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கடந்த 9 ஆம் திகதி மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தினை ஈடு செய்வது தொடர்பில் எதிர்வரும் ஆணைக்குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed