மட்டு வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் உயிர் நீத்த எம் உறவுகளுக்கு 4ஆம் ஆண்டு அனுஷ்டிப்பு!

2019.04.21 அன்று உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு வாழ் இளைஞர்களினால் நாளை வெள்ளிக்கிழமை (21.04.2023) அனுஷ்டிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 5.30 மணியளவில் கல்லடி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இவ் அனுஷ்டிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.