சஜித் கட்சியின் தமிழ் எம்.பி ரணிலுடன் இணைந்தார்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர், கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் வைத்து, அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமையும் மேலும் குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed