மட்டு வாகரையில் விபத்து; சிறுவன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு, வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியைக் குறுக்கே கடந்த சிறுவன் மீது வான் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed