Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

1 year ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனமானது விபத்துக்குள்ளானதில் அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23) யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அரச அதிபரின் மனைவி ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாவட்ட செயலாளரின் மகன் அரச வாகனத்தில் பயணிக்கும் போது பாரிய விபத்துக்கு உள்ளானார்.

இதனை பல சமூக ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டமையை காணமுடிகின்றது. இதில் உண்மைக்குப் புறம்பாக அரச வாகனம் விபத்துக்குள்ளானது என்றும், மதுபோதையில் வாகனத்தை செலுத்தினார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

அச்செய்திகளுக்கான உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவே இப்பதிவு இடப்படுகின்றது.

யாழ். இந்துக்கல்லுரியில் 2023 கணிதப்பிரிவில் கல்வி கற்ற எனது மகன் பழைய மாணவர்களின் கூட்டம் ஒன்றிற்காக தனது நண்பர்களுடன் சொந்த வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போதே பலாலி வீதியில் இவ் விபத்து ஏற்பட்டது.

அவர் அரசாங்க வாகனத்தில் பயணிக்கவில்லை, எமது தனிப்பட்ட வாகனத்தையே பாவித்தார் என்பதுடன் அவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியிருக்கவில்லை என்பதும் காவல்துறையினராலும் வைத்தியசாலையாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Steering track ஆன நிலையில் மரத்தோடு மோதி நிறுத்தியுள்ளார். இதில் வாகனம் பாரிய சேதத்திற்குள்ளான போதிலும் எனது மகனும் அவருடைய நண்பர்களும் எந்த வித உயிர் ஆபத்தும் இன்றி இறைஅருளால் காப்பாற்றபட்டுள்ளார்கள்.

உடனுக்கு உடன் செய்திகளை வழங்குவது ஊடகங்களின் பொறுப்பு. ஆனால் உண்மைக்கு புறம்பாக தனிப்பட்ட விரோதங்களினாலோ அல்லது காழ்ப்புணர்ச்சியினாலோ அல்லது விறுவிறுப்பான செய்திகளை வழங்க வேண்டும் என்ற ஆதங்கத்தினாலோ சம்பந்தபட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று சிறிதளவு எண்ணமும் இல்லாமல் ஊடகங்கள் பொறுப்பு இன்றி செயற்படுவது வேதனை அளிக்கின்றது.

விபத்து என்பது யாருக்கும் எப்பொழுதும் நிகழலாம். ஒரு விபத்து சம்பவத்தை காரணம் காட்டி அரச அதிபரின் பதவிக்கு களங்கம் ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செய்திகள் வெளியிடப்பட்டமையை என்னால் அவதானிக்க முடிந்தது.

முகம் காட்டாது பொறுப்பற்ற விதத்தில் என் பிள்ளைகளின் மனதை பாதிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.

எனினும் உண்மை செய்திகளை வெளியிட்ட ஊடகங்களும் ஆறுதல் வார்த்தைகளை கூறிய அன்புள்ளங்களும் நிறையவே இருக்கின்றன அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
தேசிய பொலிஸ் ஆணைக்குழு- பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முரண்பாடு

தேசிய பொலிஸ் ஆணைக்குழு- பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முரண்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.