Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடிப் பாலத்தருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை; நான்கு பேருக்கு விளக்கமறியல்

மட்டு கல்லடிப் பாலத்தருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை; நான்கு பேருக்கு விளக்கமறியல்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ள சந்தேக நபர்கள் நான்கு பேரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

இவ்விதம் கைது செய்யப்படவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிசார் ஆஜர்படுத்தியவேளை இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று (03) மாலை நடந்த இந்த சம்பவத்தில் வாழைச்சேனை பிரதேசத் தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டுவந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவது வழமை.

இந்நிலையில், சம்பவதினமான நேற்று முன்தினம் இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனத்தை குறித்த பகுதியின் அருகாமையில் நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
.
இந்த நிலையில் அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகரும் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் தனது சகோதரனுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளார். அதன் பின்னர் அங்குவந்து சகோதரனுடனும் சிலர் வாய்த் தர்கத்தில் ஈடுபட்ட நிலையில் பகுதியில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் மீது 4 பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களும், பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தில் ஆயித்தியமலையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை பேத்தாழை பகுதியில் திருமணம் செய்து கெண்டவருமான ஒரு பிள்ளையின் தந்தையான டிலோஜன் (வயது -33) என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலில் 7 இடத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி பாதியாக உடைந்த நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர்மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsbattinewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
Next Post
மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாமலின் குழந்தை பருவ விபரங்கள்

மஹிந்தவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாமலின் குழந்தை பருவ விபரங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.