இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (21) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளாக குறைத்து 7.75 சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் பூகோள பொருளாதாரப் போக்குகளை கவனமாக பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கை சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.
நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கம் படிப்படியாக 5 சதவீத இலக்கை அடைவதை உறுதி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை அதன் அதிகபட்ச கொள்ளளவை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.