Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசிலை பயப்படுத்தி வெளிநாடு சென்றுள்ள அரசியல் வாதிகளின் பிள்ளைகள்

ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசிலை பயப்படுத்தி வெளிநாடு சென்றுள்ள அரசியல் வாதிகளின் பிள்ளைகள்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தில் புலமைப்பரிசில் பெற்று பட்டப்படிப்பு மற்றும் இதர கல்வி நடவடிக்கைகளுக்காக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 வரை அரசியல் வாதிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பெருமளவானோர் வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருன பனாகொட தெரிவித்தார்.

இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி, உயர்கல்வி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார கேட்ட கேள்விக்கு பிரதமர் ஹரிணி சார்பில் பதிலளித்த அருன பனாகொட இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ”அவ்வாறு சென்றவர்களின் நீண்ட பட்டியல் காணப்படுவதாகவும் அதை நான் சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்த அவர், அதில் சிலரின் பெயர்களையும் வெளியிட்டார்.

வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு சென்றவர்களின் விபரத்தில் நிபந்தனைகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணாவின் மகன், 2006ஆம் ஆண்டு ஐ.எம்.கொடிதுவக்கு கருணாசேன கொடித்துவக்குவின் மனைவி அல்லது மகள் என நினைக்கிறேன்.

2006 இல் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மனைவி திருமதி ராதாகிருஷ்ணன், 2006 ஆம் ஆண்டு அரசியல் வாதியின் உறவினர் தினேஸ் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் குறித்த புலமைப்பரிசிலுக்காக 2005 முதல் 2014 வரை ஒவ்வொரு வருடமும் பல மில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வறுமையில் வாடும் உயர்கல்வி கற்க முடியாதவர்களுக்கு வழங்கப்படும் குறித்த நிதியம் 2005 தொடக்கம் 2014 வரை மோசடியாகவே வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பினரா என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை“ என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!
செய்திகள்

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

June 27, 2026
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 27, 2026
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

June 27, 2026
Next Post
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி சான்றுகள் பொதுமக்கள் பார்வைக்கு; விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி சான்றுகள் பொதுமக்கள் பார்வைக்கு; விதிமுறைகள் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு