Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்வி–விளையாட்டு அமைச்சுகள் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர் வலியுறுத்தல்

கல்வி–விளையாட்டு அமைச்சுகள் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர் வலியுறுத்தல்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (21) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சுக்கும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், விளையாட்டுச் சங்கங்களில் நிலவும் அனுமதிப்பத்திரப் பிரச்சினைகள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களால் ஏற்படும் வன்முறைகள், பாடசாலை விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய போட்டி மனப்பான்மைக்கு மாறாக, மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்தும் விளையாட்டுக் கலாசாரத்தை பாடசாலைகளில் உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாடசாலைக் கல்விக்குப் பிறகு உயர்கல்விக்காக விளையாட்டுத் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களின்போது கணினித் தரவு முறைமை ஊடாக விண்ணப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் கல்வியாளர்களாக விரிவுரையாளர்கள் மாற வேண்டும்; தென்கிழக்குப் பல்கலை உபவேந்தர் ஜுனைடீன்
செய்திகள்

மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் கல்வியாளர்களாக விரிவுரையாளர்கள் மாற வேண்டும்; தென்கிழக்குப் பல்கலை உபவேந்தர் ஜுனைடீன்

June 26, 2026
“விவசாயி ஒருவரின் உளக்குமுறல்”; விவசாயிகளை கைவிட்டதா அரசாங்கம்?
காணொளிகள்

“விவசாயி ஒருவரின் உளக்குமுறல்”; விவசாயிகளை கைவிட்டதா அரசாங்கம்?

June 26, 2026
நாளை முதல் 3 நாட்களுக்கு உயர் திறன் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு உயர் திறன் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுத்துமாறு கோரிக்கை!

June 26, 2026
ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து திருமாவளவன்- சிறீதரன் கலந்துரையாடல்
அரசியல்

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து திருமாவளவன்- சிறீதரன் கலந்துரையாடல்

June 26, 2026
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்
செய்திகள்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்படத்திற்கு எதிராக கடையடைப்பு போராட்டம்

June 26, 2026
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஜூலை 31 வரை ஒத்திவைப்பு!

June 26, 2026
Next Post
வணிக உரிமையாளர்களை குறிவைத்து மோசடி; எச்சரிக்கை விடுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை

வணிக உரிமையாளர்களை குறிவைத்து மோசடி; எச்சரிக்கை விடுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு