மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இன்று (22) மாலை ஆலைய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் உச்சநிலையாக தேர்த்திருவிழா, ஆலய பிரதம குருக்கள் தலைமையில் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் அர்ப்பணிக்கப்பட்டதுடன், தமிழ் வேத பாராயணங்களும் இடம்பெற்றன.
மாலை 3 மணிக்கு ஆரம்பமான தேரோட்டத்தில், ஆண்களும் பெண்களும் தனித்தனியாக வடம் இழுத்து தேரை இழுத்தனர். இவ்விழாவில் இலங்கையில் முதன்முறையாக “வசந்தி கௌதவம்” ஆடப்பட்டதுடன், வெளிவீதியில் பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்று, பக்தர்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஆகம முறைப்படி முருகப்பெருமானுக்கு பூஜை நடைபெறும் இவ்வாலயம், மகா துறவி ஓங்கார நாத சரஸ்வதியப்பா அவர்களால் நிறுவப்பட்டு, சித்தர் பீடமாகவும் சிறப்புப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















