ராகம பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8.168 கிலோ கிராம் ஹெரோயின், 666 கிராம் ஐஸ், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 8,23,000 ரூபாய் மூன்று மின்சார ஸ்கூட்டர்கள், ஒரு வேன், ஒரு கார், ஒரு முச்சக்கர வண்டி, பல உரிமத் தகடுகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ப
வேறு ஒருவரின் தூண்டுதலுடன் குறித்த சந்தேக நபர்கள் இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








