அரசாங்கத்தினால் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்பு அரசாங்கத்தினால் சகல தேவாலயங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பிறப்பு நாட்களில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் நாளை (01.01.2026) புதுவருட பிறப்பிற்க்காக நள்ளிரவு ஆராதனை மற்றும் வீதி பாதுகாப்பிற்காக புளியந்தீவு மரியாள் தேவாலயம், தாண்டவன் வழி காணிக்கை மாதா தேவாலயம், குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயம் மற்றும் இதர மெதடிஸ்த தேவாலயங்கள் என மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ஆலய நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் வழிபாடுகளுக்கு வரும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதேவேளை அரசாங்கத்தினால் பிரதான புத்தாண்டு வழிபாடுகள் இடம் பெற உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








