டிட்வா சூறாவளியால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி எதிர்வரும் 10 முதல் 14 வரை நடைபெறவுள்ளது.
டிட்வா பேரழிவால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி எதிர்வரும் 10 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் சுமார் 3000 சகோதர சகோதரிகளின் பங்கேற்புடன் இந்த மாபெரும் சிரமதானப் பணி செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








