Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

அரசின் மின்கட்டண உயர்வை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது; மஹிந்த ராஜபக்ஷ

6 months ago
in அரசியல், செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.

விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார்.

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!
செய்திகள்

உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!

June 20, 2026
பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!
செய்திகள்

பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

June 20, 2026
எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!
செய்திகள்

எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!

June 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!

June 20, 2026
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
Next Post
சதொச மோசடி வழக்கு; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு

சதொச மோசடி வழக்கு; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு