Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்”; யாழில் விவசாயிகளை மிரட்டும் நபர்!

“காணிக்குள் கால் வைத்தால் சுடுவோம்”; யாழில் விவசாயிகளை மிரட்டும் நபர்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

அத்தோடு குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும், பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள்,

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் விவசாயம் செய்துவந்த நிலையில் அப்பகுதியில் காணப்பட்ட பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி அடைக்கப்பட்ட குறித்த காணி அரசகாணி எனவும் நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுவரை உரிய அதிகாரிகளால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்தரும் மரங்களை நட்டு காலாகாலம் நாம் விவசாயம் செய்துவந்த பகுதியை தனி நபர் ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சுவீகரித்துள்ளார்

குறித்த பகுதிக்கு நாம் செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும்,பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதுடன்,

காலா காலம் நாம் பாதுகாத்து வந்த மணல் மற்றும் காடுகள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக ஏனைய இடங்களுக்கு கடத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த காணி அரச காணியென பிரதேச செயலர் அறிவித்தும் இதுவரை சம்மந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியதுடன்,

தமது நிலத்தை மீட்டு தம்மிடமே ஒப்படைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதித்த சம்பவம்; நாளை அவசரப் பொதுக்கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.