பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 6 வருடங்கள் வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பன்னிரண்டு வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தப் பன்னிரண்டு வருட சிறைத்தண்டனையை ஏககாலத்தில் 6 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.








