Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் சமூக ஊடகத்தில் மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழில் சமூக ஊடகத்தில் மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் மாணவி ஒருவரது புகைப்படம் மற்றும் இன்னொரு மணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் “ரிக்ரொக்” சமூக ஊடகத்தில் கீழ்த்தரமான பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

இன்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள், அவதூறு பரப்பியவரின் வீடிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர்.

இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தையார் நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தால் குறித்த நபர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசில் இரு மாணவிகளின் பொற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசார் இருவரையும் இன்றையதினம் (17) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இன்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாள்களும், மாணவனின் தந்தையை 14 நாட்கள் சிறையில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிடிருந்தமை குறிப்பிடத்தக்கது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள் அன்பளிப்பு

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள் அன்பளிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு