Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்றுமாறு இம்ரான் மகரூப் கோரிக்கை

விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்றுமாறு இம்ரான் மகரூப் கோரிக்கை

3 months ago
in செய்திகள்

எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள ஒவ்வொரு புதன் கிழமையும் அரசவிடுமறையானது தூரப் பிரதேசங்களிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு மனக் கஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அதிகமான அரச உத்தியோகத்தர்கள் தூரப் பிரதேசங்களில் இருந்து பணிக்குச் செல்கின்றனர். இவர்கள் தமது அலுவலகப் பகுதியில் தங்கி இருக்கின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதன் கிழமை விடுமுறை சொந்த பிரதேசங்களில் பணிபுரிவோருக்கு நன்மையளிப்பது போல இவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது
இந்த ஒரு நாள் விடுமுறையைப் பயன்படுத்தி இவர்களால் தமது வீடுகளுக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நாட்டின் நெருக்கடி நிலை குறித்து கவனத்தில் கொண்ட அரசாங்கம் இவ்வாறான உத்தியோகத்தர்களின் நலன் குறித்து கவனத்தில் கொள்ளாது அவர்களைக் கைவிட்டுள்ளது கவலையை ஏற்படுத்துகின்றது.

எனவே, அரசாங்கம் இந்த விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்ற வேண்டும். அல்லது தூரப் பிரதேசத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் நன்மை பெரும் வகையில் ஏதாவது திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சகல அரச உத்தியோகத்தர்களும் அரசாங்கத்தினால் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். சிலர் நன்மையடையும் அதேவேளை இன்னும் சிலர் கஸ்டப்படும் நிலை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றேல் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!
செய்திகள்

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!

June 20, 2026
உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!
செய்திகள்

உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!

June 20, 2026
பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!
செய்திகள்

பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

June 20, 2026
எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!
செய்திகள்

எரிபொருள் QR முறை நீக்கப்படுமா?; தொடரும் ஆய்வுகள் குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்!

June 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 37 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு மாணவர் கைது!

June 20, 2026
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
Next Post
நாமலின் ரூ.2 மில்லியன் மின்கட்டண வழக்கு; உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நாமலின் ரூ.2 மில்லியன் மின்கட்டண வழக்கு; உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு