எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான பொறுப்பை நாமல் ராஜபக்ஷ சிறந்த முறையில் செயற்படுத்துகிறார்.
மக்களும் அவரை எதிர்க்கட்சித் தலைவராகவே பார்க்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மீது ஒட்டுமொத்த சுமையையும் திணிக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது.
நெருக்கடி நிலைமையை கையாளும் திறன் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும்.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளான போது மக்கள் விடுதலை முன்னணி அந்த நெருக்கடியை தனது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தியது.Politics
தமது ஆதரவாளர்களை வீதிக்கிறக்கி போராட்டங்களை தோற்றுவித்தது.








