2025/2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர (O/L) பரீட்சையில், பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட அடாவத்தை பது/திருமகள் தமிழ் வித்தியாலயம் முதல் முறையாகப் பரீட்சைக்கு தோற்றி 100 சதவீத சித்தி வீதத்தைப் பெற்று குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
பாடசாலையின் கல்வி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த வெற்றி, மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் பலனாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெற்றிக்கு பாடசாலையின் அதிபர் எஸ். யோகராஜா தலைமையில் பணியாற்றிய ஆசிரியர்கள், பசறை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பு பெரிதும் துணைபுரிந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனைக்கு பங்களித்த அனைவருக்கும் பாடசாலை சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்திலும் கல்வித் துறையில் மேலும் பல வெற்றிகளைப் பெற உறுதிபூண்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.










