Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

5 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தியும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் இன்று அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“தமிழீழ சுயநிர்ணய அமைப்பு” , “சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்” மற்றும் பல தமிழ் தேசிய அமைப்புகள் இணைந்து நேற்று (20) மதியம் 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமிழீழத் தேசியக் கொடிகளையும், கோரிக்கை பதாகைகளையும் ஏந்தியவாறு, “நீதியும் சுயநிர்ணயமும் தமிழீழத்திற்கே!” என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து தங்களது கண்டனங்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழீழப் பகுதிகளில் சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும், தமிழர்களின் பேச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், நினைவேந்தல் உரிமை மற்றும் கலாச்சார உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும், ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தொடர்ச்சியான அரசியல் ஒடுக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் போன்று ஐந்து பிரதான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டன.

“எங்கள் நிலம், எங்கள் மக்கள், எங்கள் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இளையோர் முதல் முதியோர் வரை பெருந்திரளான மக்கள் இதில் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடூரங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களும், பிரித்தானிய அரசாங்கம் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இப்போராட்ட களத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
Next Post
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு