கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் கீழ், வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த இரண்டு இந்திய சாட்சிகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வெளிநாட்டு சாட்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.







