Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி இத்தாலி விசாவுடன் சென்ற யாழ் பயணி பண்டாரநாயக்கவில் கைது!

போலி இத்தாலி விசாவுடன் சென்ற யாழ் பயணி பண்டாரநாயக்கவில் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போலி இத்தாலிய விசாவுடன் சென்ற பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (28) விமான நிலையத்தின் (BIA) புறப்படும் முனையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பயணி, மஸ்கட் நோக்கிச் செல்லும் WY-372 ஓமன் எயர் விமானத்தில் செல்வதற்காக பதிவு செய்திருந்த வேளை அவரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவரது ஆவணங்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் விமான ஊழியர்களால் அவர் குடிவரவு எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கபட்டார்.

அங்கு அவரது கடவுச்சீட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவரது விசா போலியானது எனத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பயண முகவர் ஒருவர் அவருக்கு விசா ஏற்பாடு செய்ததாகவும், அவர் சேவைகளுக்காக 1 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தியதாகவும் கூறியிருந்தார்.

தனது கடவுச்சீட்டில் போலி விசா இருப்பது தெரியாமல் இருந்த பயணி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களக் கிளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போலி வெளிநாட்டு விசாக்கள் அல்லது பயண ஆவணங்களை அதிக விலைக்கு ஏற்பாடு செய்யும் போலி பயண முகவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி செய்பவர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதால், பயண ஆவணங்களை செய்து கொள்வதற்காக முகவர்களிடம் பெரும் தொகையை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு குடிவரவு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பயணி தனது விசா அல்லது வேறு ஏதேனும் பயண ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கொண்டால், அவர்கள் செல்ல விரும்பும் நாட்டின் அந்தந்த தூதரகம் அல்லது வெளிநாட்டு தூதரகத்துடன் அதைச் சரிபார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவல்; சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

June 20, 2026
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!
செய்திகள்

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருடியதாக பெண் சட்டத்தரணி கைது!

June 20, 2026
உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!
செய்திகள்

உயர்தரக் கல்விக்கு 2.25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி!

June 20, 2026
பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!
செய்திகள்

பெண் வைத்தியருக்கு எதிரான அவதூறு பிரசாரம்; அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

June 20, 2026
Next Post
நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு