Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தம்புள்ளை மைதானத்தில் நிறுவப்பட்ட ‘தனித்துவ மையம்’ ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

தம்புள்ளை மைதானத்தில் நிறுவப்பட்ட ‘தனித்துவ மையம்’ ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை ” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ளை மைதானத்தில் நிறுவப்பட்ட ‘தனித்துவ மையம்’ நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, தனித்துவ மையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்.

இதன் கீழ் நீர் சிகிச்சைப் பிரிவு மற்றும் விளையாட்டு காயங்களை குணப்படுத்தும் புதிய மருத்துவ பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதன் பின்னர், தம்புள்ள விளையாட்டரங்கில் நிறுவப்பட்டுள்ள புதிய சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நீச்சல் தடாகத்தின் செயற்பாடுகளையும் அவதானித்தார்.

இந்த பிரிவுகளுக்கு மேலதிகமாக, விளையாட்டு வீரர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய உள்ளக கிரிக்கெட் மைதானம், புதிய ஊடக மையம் மற்றும் பிரதான கேட்போர் கூடம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இதேவேளை, சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்டுள்ள ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அதிநவீன LED ஒளிவிளக்குக் கட்டமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

மேலும் இங்கு பல கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கிரிக்கெட் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்
செய்திகள்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்

June 15, 2026
நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை
உலக செய்திகள்

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

June 15, 2026
மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்
செய்திகள்

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

June 15, 2026
பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்
செய்திகள்

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்

June 15, 2026
திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

June 15, 2026
யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!
செய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

June 15, 2026
Next Post
சாதாரண ஆடைகளில் பணிக்கு செல்லும் தாதியர்கள்!

சாதாரண ஆடைகளில் பணிக்கு செல்லும் தாதியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு