Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கயிறு இறுகியதால் உயிரிழப்பு!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கயிறு இறுகியதால் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் கயிறு கழுத்தில் இறுகியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றள்ளது.

நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய், இரு மகள்மார் மற்றும் 12 வயதுடைய மகன் என நால்வர் வசித்து வந்துள்ளனர்.

தந்தை இறந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தாய் பிள்ளைகளைப் படிக்க வைத்து வாழ்ந்து வரும் நிலையில், மூத்த மகள் பல்கலைக்கழகப் படிப்புக்குச் சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வழமைபோல் சிறுவன் மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

தாய் தலைவலியால் வீட்டில் உறங்கிய நிலையில் பிற்பகல் ஒரு மணியளவில் மரத்தில் விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகித் துடித்துள்ளார்.

சம்பவத்தை அவதானித்த அருகிலிருந்த வீட்டார் அந்தச் சிறுவனைக் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து மரத்துக்கு அருகில் ஓடியவர்கள் சிறுவனை மீட்ட போதிலும் சிறுவன் மயக்கத்தில் இருக்கின்றார் என்று உணர்ந்து 1990 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பின் அவசர நோயாளர் காவு வாகனத்தில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மருத்துவர்கள் சிறுவனைப் பரிசோதித்தபோது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த நுவரெலியா பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதிவானின் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச
செய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச

June 21, 2026
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
Next Post
ரணிலுடன் கூட்டு சேர்ந்துள்ள சஜித் அணி உறுப்பினர்கள்!

ரணிலுடன் கூட்டு சேர்ந்துள்ள சஜித் அணி உறுப்பினர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.