Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொல்லை கொடுத்த முன்னாள் காதலன்; கணவனை வைத்து கால்களை உடைத்த முன்னாள் காதலி!

தொல்லை கொடுத்த முன்னாள் காதலன்; கணவனை வைத்து கால்களை உடைத்த முன்னாள் காதலி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியான நேற்று முன்தினம் பெண்ணொருவர் தன்னுடைய கணவனை வைத்து, முன்னாள் காதலனின் கால்களை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் தனது கணவனை அழைத்து தனது முன்னாள் காதலனை நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் துண்டித்ததாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது ஹிக்கடுவ களுபே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டுள்ளார்.

அதன் பின் தொழிற்கல்வியில் பட்டம் பெற்ற பிறகும் அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அப்பெண் வேறொருவரை திருமணம் செய்துள்ளார்.

அவரது பழைய காதலரும் அவளுடன் உறவைப் பேணி வந்த நிலையில் பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பின்னாளில் தொல்லையாக மாறியுள்ளது.

அதேவேளை, தனது முன்னாள் காதலனிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கணவனும் செவிமடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த அழைப்புகளை எப்படி நிறுத்துவது என்று அவரது கணவர், மனைவிக்கு அறிவுறுத்தியதாகவும், அதன்படி தனது முன்னாள் காதலனின் தொலைபேசி அழைப்பிற்கு அன்பாக பதிலளித்து, சந்திக்க அழைத்துள்ளார்.

இந்த அழைப்பின் பேரில் முன்னாள் காதலன் தாடல்லா கடற்கரைக்கு வந்ததும், கணவர் குண்டாந்தடியால் அடித்து கால்களை உடைத்து நிர்வாணமாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 32 வயதான ஒருவரே பாதிக்கப்பட்டு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு