Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு பரிந்துரை; வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் எதிர்ப்பு!

புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு பரிந்துரை; வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் எதிர்ப்பு!

2 years ago
in செய்திகள்

வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம்,தெங்கு அபிவிருத்திசபை,பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியா பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதன்போது பூங்காவீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காணியினை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர் தீலிபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

புலனாய்வு பிரிவு அனைத்து இடங்களிலும் இயங்கமுடியும், அது ரகசியமாக இருக்கவேண்டிய அமைப்பு. எனவே நகரப்பகுதியில் அதற்கு காணி வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
Next Post
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை; அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை; அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு