Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தகாத வார்த்தை பிரயோகங்களை எதிர் நோக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள்!

தகாத வார்த்தை பிரயோகங்களை எதிர் நோக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் அடிக்கடி தாமதம் மற்றும் இரத்துச் செய்யப்படுவதால், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் தூசண வார்த்தை பிரயோகங்களை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை உடனடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜனக்க விஜயபத்திரண தெரிவித்தார்.

“அதிக எடையுடன் வண்டியை ஏற்றினால், மாடு வண்டியை இழுக்க முடியாமல் மாடு இறந்துவிடும்” என்பது போன்ற நிலை உள்ளது என்றார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பாரியளவு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், தற்போது அனுபவமுள்ள முதிர்ச்சியடைந்த பெருமளவிலான பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களில் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, அனுபவமும் முதிர்ச்சியுமான ஊழியர்களை இலங்கைக்கு ஆட்சேர்ப்பு செய்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான தற்போதைய விமானங்களுக்கு ஏற்றவாறு புதிய விமான அட்டவணையை தயார் செய்யுமாறு தமது தொழிற்சங்கம் அவசரமாக கோருவதாக ஜனக விஜயபத்திரத்ன தெரிவித்தார். விமானம் ரத்து மற்றும் தாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இந்த நிலைமை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் நாட்டின் பெருமை மற்றும் நற்பெயரை மோசமாக பாதிக்கும் என்றும் ஜனக விஜயபதிரத்ன கூறினார்.

இந்த அவசர வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 04.30 மணியளவில் ஆரம்பமானது, இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னை, இந்தியாவின் ஹைதராபாத், பங்களாதேஷின் டாக்கா மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் செல்லும் விமானங்கள் சற்று தாமதமாகின.

இந்த உடனடி வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை ​(25) காலை 06.30 மணியளவில் முடிவடைந்தது, இதன் விளைவாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இந்த விடயங்கள் தொடர்பில் திங்கட்கிழமை (26) கலந்துரையாடுவதற்கு இலங்கை நிர்வாகம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் ஜனக விஜயபதிரத்ன தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
Next Post
இந்தியாவை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ள இலங்கை!

இந்தியாவை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ள இலங்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.