Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்திற்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்திற்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள்நேற்று (22) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கலாச்சார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

யுனான் பல்கலைக்கழக உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குறித்த நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அத்துடன் சீன பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்குமிடையிலான கூட்டம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், பீடாதிபதிகள், பதிவாளர், நூலகர், நிதியாளர் அத்துடன் சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, குறித்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும், யுனான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் அவர்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன்போது, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் இப்பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிருவாக தலைமைத்துவ பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர்.சிதம்பரேசன் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹூ ஜின்மிங்க் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், விஜயத்தின் ஒரு அங்கமாக Confucius Unit நிலையத்திற்கான உத்தேச இடம் சீன பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது.

மேற்படி நிலையம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
நிலவில் ரயில் விடப்போகும் அமெரிக்கா!

நிலவில் ரயில் விடப்போகும் அமெரிக்கா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.