Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்; சுமந்திரன் சுட்டிக்காட்டு!

தமிழரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயல்; சுமந்திரன் சுட்டிக்காட்டு!

2 years ago
in அரசியல், செய்திகள்

”தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு, தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

தேர்தல்கள் வருகின்ற போது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகவே பார்க்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
Next Post
தலவாக்கலை பொலிஸ் பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு