Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி!

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (17) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க மகளிர் அணியை வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து 302 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44 ஓவர்கள் 3 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

ஒருநாள் போட்டியில் மகளிர் அணி அதிக ஓட்டங்களை எட்டுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, ஒருநாள் போட்டியில் வீராங்கனை ஒருவர் பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஓட்டமாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, போட்டியின் அட்டநாயகியாக சமரி அத்தபத்து தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகியாக லாரா வோல்வார்ட் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
கொழும்பில் நாளை கறுப்புப்பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் நாளை கறுப்புப்பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு