Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் பெற்றோர்களை இழந்த பிள்ளையை பாலியல் துஷ்பிரயோம் செய்த அண்ணன்!

யாழில் பெற்றோர்களை இழந்த பிள்ளையை பாலியல் துஷ்பிரயோம் செய்த அண்ணன்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில், சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், தாய், தந்தையை இழந்த பின்னர் சகோதரியுடன் வடமராட்சி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் சகோதரி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து சகோதரன் காப்பகத்தில் இருந்த தனது சகோதரியை வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் அழைத்து வந்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையில் சகோதரிக்கு போதை ஊசியினை செலுத்தியும் மதுபானம் உள்ளிட்டவற்றை கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.

ஏப்ரல் மாதம் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து மீண்டும் காப்பகத்தில் அவரை சேர்த்துள்ளார். பின்னர் இந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டடு வந்தமையையும் , சித்திரவதைகளுக்கு உள்ளானமையும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தில் , வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்றே வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் தொடர் விசாரணைகளின் போது , சம்பவத்துடன் பெண்ணின் சகோதரனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தன்னை சகோதரனே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாகவும் , வேறு நபர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும் , சகோதரன் மீதான பயத்திலேயே முன்னர் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கல்விக் கோட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம்!

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கல்விக் கோட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு