Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கேளிக்கை விளையாட்டு அரங்கில் தீ விபத்து; 27 பேர் பலி!

கேளிக்கை விளையாட்டு அரங்கில் தீ விபத்து; 27 பேர் பலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய கேளிக்கை விளையாட்டு அரங்கில் திடீரென தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு அரங்கம் முழுவதும் பரவியது.

இதில் தீப்பிழம்புகளுடன் வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. தீ விபத்தை தொடர்ந்து விளையாட்டு அரங்கத்துக்குள் இருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவரும் அலறியடித்துக்கொண்டு அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

ஒரு சிலர் விளையாட்டு அரங்கத்தை விட்டு விரைவாக வெளியேறி உயிர் தப்பினர். அதே சமயம் தீப்பிடித்த சற்று நேரத்தில் விளையாட்டு அரங்கின் நாலாபுறமும் தீ சூழ்ந்ததால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விளையாட்டு அரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் விளையாட்டு அரங்கத்தை நெருங்க முடியவில்லை.

இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதைத்தொடர்ந்து விளையாட்டு அரங்கத்துக்குள் இருந்து சிறுவர்கள் உள்பட 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கேளிக்கை விளையாட்டு அரங்க தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

June 28, 2026
திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!
செய்திகள்

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

June 27, 2026
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 27, 2026
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
Next Post
குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கணவன்!

குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு