Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாட்ஜி.பி.டிக்கு சம்பவம் செய்த கூகுள் பார்ட்; புதிய அம்சத்தை சேர்த்த சுந்தர் பிச்சை!

சாட்ஜி.பி.டிக்கு சம்பவம் செய்த கூகுள் பார்ட்; புதிய அம்சத்தை சேர்த்த சுந்தர் பிச்சை!

2 years ago
in தொழில்நுட்பம்

பதிலடி கொடுத்தால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனமானது, ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) எதிராக “புதுவிதமான சம்பவம்” ஒன்றை செய்துள்ளது; அதுவும் சைலன்ட் ஆக செய்துள்ளது!

ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் களமிறக்கிய பார்ட் ஏஐ சாட்பாட்டில் (Bard AI Chatbot) அட்டகாசமான புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது கூகுள் பார்ட்-க்கு கிடைத்துள்ள “மிக முக்கியமான அம்சங்களில்”‘ ஒன்றென கூறலாம்.

கூகுள் பார்ட்டில் ப்ரீஸைஸ் லோக்கேஷன் சப்போர்ட் (Precise location support) என்கிற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, மிகவும் துல்லியமான முறையில் இருப்பிடங்களை கண்டறியும் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சன், உங்களுடைய டிவைஸ்களின் வழியாக நீங்கள் சரியான எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும்.

ப்ரீஸைஸ் லோக்கேஷன் சப்போர்ட் மூலம், கூகுள் பார்ட்-ஆல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு (முன் எப்போதை விடவும்) மிகவும் பொருத்தமான பதில்களை (More relevant responses) வழங்க முடியும் மற்றும் உள்ளூர் சார்ந்த தேடல்களுக்கான சிறந்த முடிவுகளை (Better local results) வழங்க முடியும்.

ஏனென்றால் இது தனிப்பட்ட விருப்பத்தின் கீழ் கிடைக்கும் ஒரு அம்சமாகவே இருக்கும். கூகுளின் கூற்றுப்படி, நீங்கள் கூகுள் பார்ட்-க்கு செல்லும்போது, ​​”மிகவும் தொடர்புடைய பதில்களை பெற, உங்கள் டிவைஸின் ப்ரீஸைஸ் லோக்கேஷனை பயன்படுத்துவதற்கு பார்ட்-ஐ அனுமதிக்கவும்” என்கிற பாப்அப் காட்டப்படலாம்.

அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான், “உங்களுக்கு அருகிலுள்ள உணவகங்கள் (Restaurants near you) மற்றும் நீங்கள் இருக்கும் பகுதி தொடர்பான பல விஷயங்களை (About your area) பற்றி மிகவும் பொருத்தமான பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்” என்று கூகுள் கூறியுள்ளது.

உள்ளூர் தேடல் (Local search) என்பது உள்ளூரில் இருக்கும் சிறிய வணிகங்களுக்கான மிகப்பெரிய உந்துசக்தியாகும். அதேசமயம், அதே உள்ளூரில் உள்ள “மொக்கையான” இடங்களில் (Bad Tourist Spots) அல்லது மோசமான கடைகளில் / உணவகங்களில் (Worst Hotels) நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும் உதவும்.

உதாரணத்திற்கு, இந்த ஊரில் சுற்றிப்பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் என்னென்ன? இந்த ஊரில் நிச்சயம் சாப்பிட வேண்டிய உணவகங்கள் எங்கே உள்ளன? போன்ற தேடல்களுக்காக நீங்கள் கூகுள் பார்ட்-ஐ பயன்படுத்தினால், அது உங்களுக்கான சிறந்த பரிந்துரைகளை வழங்கும். இதனால் உங்களுக்கும் நல்லது; உள்ளூரில் உள்ள சிறந்த கடைகளுக்கும் நல்லது!

இதுபோன்ற காரணங்களால் தான் ப்ரீஸைஸ் லோக்கேஷன் சப்போர்ட் ஆனது பார்ட்-க்கு கிடைத்துள்ள மிக முக்கியமான அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது தற்போது வரையிலாக பீட்டா சோதனையில் (Beta Testing) உள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த மாதம் வெளியான அப்டேட் வழியாக, இமேஜ்களுக்கான ஆதரவு பார்ட்டில் சேர்க்கப்பட்டது.

இதன் மூலம் கூகுள் சேர்ச்சில் (Google Search) இருந்து இமேஜ்களை கொண்டு வரும் திறன் பார்ட்-க்கு கிடைத்தது. அதாவது பார்ட் ஏஐ சாட்பாடிடம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு, வெறும் டெக்ஸ்ட் பதில்கள் (Text Answers) மட்டுமின்றி, புகைப்படங்களுடனான பதில்களும் (Responses with visuals) கிடைக்கும்!

தொடர்புடையசெய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி
உலக செய்திகள்

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ ஏவிய இஓஎஸ்-09 செயற்கைக்கோள் தோல்வி

May 18, 2025
காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்
செய்திகள்

ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்

May 1, 2025
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்
செய்திகள்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்

April 24, 2025
சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி
உலக செய்திகள்

சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி

April 20, 2025
ஏவுகணைகளை அழிக்கும் இந்தியாவின் லேசர் தொழில்நுட்பம்
உலக செய்திகள்

ஏவுகணைகளை அழிக்கும் இந்தியாவின் லேசர் தொழில்நுட்பம்

April 18, 2025
Next Post
மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்!

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.