வடிவேல் சுரேஷுக்கு வழங்கப்பட்டது அமைச்சுப் பதவி!
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு தொழில் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் தாம் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றதாக இன்றைய சபை அமர்வில் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றமை யும் மேலும் குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed